அறிவிப்பு

இந்த இணைய பக்கத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் வரிசைப்படி படித்து புரிந்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் வாசியுங்கள், சந்தேங்கங்கள் இருந்தால் கேள்விகளை பதிவுசெய்யுங்கள்.
மனிதர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரைகளும் இன்றி, ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை கற்றுத்தரவே தொடங்கப்பட்டது. அவ்வளவு ஏன் எந்த மனிதனும் அக்குபங்சர் உட்பட எந்த மருத்துவ துறையை சார்ந்த மருத்துவரையும் நாடாமல். நோய்களின்றி இறுதி நாட்கள் வரையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஒரு வேலை நோய்கள் உண்டானால் தனக்கு தானே சரி செய்துக்கொள்ள இயல வேண்டும் என்ற நோக்கத்ததுடனே இந்த இணையப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையப் பக்கத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் வரிசைப்படி படித்து புரிந்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் வாசியுங்கள், சந்தேங்கங்கள் இருந்தால் கேள்விகளை பதிவுசெய்யுங்கள். 

இயற்கை வாழ்வியல் 
  1. ஆரோக்கியமாக வாழ்வது எப்படி. 
  2. உடல் உபாதைகளுக்கு காரணம் என்ன?
  3. நோய்கள் ஏன் உருவாகின்றன?
  4. மருந்து மாத்திரைகள் இன்றி அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை அடைவது எப்படி?
  5. அக்குபங்சர் புள்ளிகள் மூலம் பக்க விளைவுகள் இல்லா நிரந்தர தீர்வு.
இந்த இணைய பக்கத்தின் முதன்மை நோக்கமானது, மனிதனைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது. மனிதன் என்றவுடன் பலர் உடலைத்தான் எண்ணுகிறார்கள். உடல் என்பது தனியாக இயங்க முடியாது என்பதை பலர் உணர்ந்துக் கொள்வதில்லை. உடலில் ஏதாவது உபாதைகள் தோன்றினால், உடலை மட்டுமே பரிசோதிக்கிறார்கள்.

மனிதனின் படைப்பை முழுமையாக அறியாத ஆங்கில மருத்துவர்களும், நோய் என்றவுடன் உடலை மட்டுமே பறிசோதிக்கிறார்கள். மனித உடல் இயங்க முக்கிய காரணமாக இருக்கும் மற்ற விஷயங்களை பற்றி சிந்திப்பதேயில்லை. இதனால்தான் பல நோயாளிகள் தங்களின் நோய்கள் குணமாகாமல் வாழ்நாள் முழுமைக்கும் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள்.

இந்த இணைய பக்கத்தில் மனித உடலை மட்டுமின்றி, உடலுடன் இனைந்து செயல்படும் மனம், சக்தி மற்றும் உயிர்; இவை நான்கையும் தெளிவாக அறிந்துக்கொள்வோம். மருந்து மாத்திரைகள் இன்றி அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை அடைவதும் எவ்வாறு என்பதையும் தெரிந்துக்கொள்வோம். வாழ்வின் இறுதிவரையில் மனிதர்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதன் ஒரு சிறு முயற்சிதான் இந்த இணைய பக்கம்.

இந்த உலகில் ஏறக்குறைய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பத்தாயிரத்து மேற்பட்ட நோய்களுக்கு மட்டுமே ஆங்கில மருத்துவத்தில் மருத்துவம் உள்ளதாக(?) ஒரு கணிப்பு கூறுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, 30,000 நோய்களை அறிந்துக்கொள்வது எளிதா அல்லது பிறந்த நாள் முதல் தன்னுடனே இருக்கும் உடலை அறிந்துக்கொள்வது எளிதா. நீங்களே சிந்தியுங்கள்.

மனிதனின் உடலையும் மனதையும் அறிந்துக்கொள்ள, ஒரு மருத்துவராக இருக்கவேண்டும் என்றோ, ஏதாவது ஒரு மருத்துவம் பயில வேண்டும் என்றோ எந்த கட்டாயமும் கிடையாது. பிறந்த நாள் முதலாக தன்னுடனே இருக்கும் இந்த உடலை சற்று உன்னிப்பாக கவனித்தாலே போதும், அனைத்து உண்மைகளும் தெளிவாகும்.

வாழ்க்கையில் அனைத்தையும் படித்தோ அனுபவித்தோதான் உணர வேண்டும் என்றில்லை. கண்களையும், செவிகளையும், மனதையும் திறந்து வைத்தாலே அனைத்து உண்மைகளும் புரிந்துவிடும். சிறு குழந்தைகளை கவனித்தாலே போதும் குழந்தைகளை பற்றி ஒரு அளவுக்கு அறிந்துக்கொள்ளலாம். நம்மை சுற்றி வாழும் முதியவர்களை கவனித்தாலே போதும் முதுமை என்றால் என்னவென்று அறிந்துக்கொள்ளலாம். நோயாளிகளை கவனித்தாலே நோய்கள் என்றால் என்னவென்று அறிந்துக்கொள்ளலாம்.

அறியாமையினால் மனிதர்கள் அனுபவிக்கும், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நோய்வகைகளை அறிந்து கொள்வதைவிடவும்; அனைத்து நோய்களையும் அனுபவிக்கும் இந்த உடலைப் பற்றிய அறிவு இருந்தால் எல்லா நோய்களையும் சுலபமாக குணபடுத்தலாம் அல்லவா.


1-1: இயற்கையில் பஞ்சபூதங்கள்

பஞ்சபூதங்கள் ஐந்து
1. நெருப்பு
2. நிலம்
3. காற்று
4. நீர்
5. மரம் / ஆகாயம்

விஞ்ஞானம் கூறும், பஞ்சபூதங்களும், இந்த உலகமும் அதன் உயிரினங்களும் உருவான விதம்.

(நெருப்பு மூலகம்) Big bang என்று அழைக்கப்படும் பெரும் வெடிப்புக்குப் பிறகு, நாம் வாழும் இந்த கோல் பிரிந்து, ஒரு நெருப்பு பந்தாக எரிந்து கொண்டிருந்தது.

(நிலம் மூலகம்) பல கோடி ஆண்டுகள் எரிந்த பிறகு, நெருப்பின் உஷ்ணம் மெல்லத் தணிந்து, இப்போது நாம் இருக்கும் இந்த நிலமாக மாறியது.

(காற்று மூலகம்) பல கோடி ஆண்டுகள், கட்டாந்தரையாக இருந்த இந்த பூமியில், வாயுக்கள் உருவாக தொடங்கின.

(நீர் மூலகம்) பூமியில் உருவான வாயுக்கள், வானத்தில் மேகமாகத் திரண்டு, மழையாகப் பெய்தன.

(மரம் மூலகம்) மழை பெய்த பிறகு, பூமியில் புல், பூண்டு, செடி, மரங்கள் போன்றவை உருவாக தொடங்கின.

நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் (ஆகாயம்) எனும் இந்த ஐந்து பஞ்சபூத மூலங்களும் இனைந்து, பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்தன. இப்படி உருவான உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், மிக உயர்வான, உன்னத, முழுமை பெற்ற படைப்பாக இறுதியில் மனிதன் படைக்கப்பட்டான்.


இந்த உலகின் பஞ்சபூதங்களும் அதன் செயல்பாடுகளும்

நெருப்பு – இந்த பூமியின் உயிர்களுக்கு நெருப்பு சக்தி சூரியனிலிருந்து கிடைக்கிறது. இந்தப் பூமியில் வாழும் தாவரங்கள் முதல், புழு பூச்சி, கடல் வாழ் உயிரினங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்கு சூரியனிலிருந்து கிடைக்கும் நெருப்பு சக்தி உறுதுணையாக இருக்கிறது.

நிலம் – இந்தப் பூமியே நிலம் சக்தியை உருவாக்குகிறது. பூமியின் மண்ணின் அமைப்பே உயிர்கள் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகிறது.

காற்று – இந்தப் பூமியில் சூழ்ந்து இருக்கும் காற்று சக்தி, உயிர்கள் சுவாசிக்கவும், உயிர் வாழவும் உறுதுணையாக இருக்கிறது.

நீர் – நீரின்றி அமையாது உலகு என்று சொல்லும் அளவுக்கு இந்த நீர் சக்தி இந்த பூமியில் வாழும் உயிர்களுக்கு பெருந்துணையாக இருக்கிறது.

மரம்/ஆகாயம் – சீன மருத்துவத்தில் மரம் என்றும், தமிழ் மருத்துவத்தில் ஆகாயம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சக்தி. காற்றில், பூமியில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய துணைபுரிகிறது. மரங்கள் இல்லை என்றால் காற்றில் கலக்கும் கழிவுகள் சுத்தம் செய்ய முடியாமல் உயிர்கள் அழியும்.

நெருப்பு, நிலம், கற்று, நீர் மற்றும் மரம் எனும் ஐந்து பஞ்சபூதங்கள் இனையும் போதுதான் உயிர்களின்  படைப்பு தோன்றுகிறது. இந்த பஞ்சபூத சக்திகள் குறையும் போதும், பழுதுபடும் போதும், சக்தி ஓட்டம் தடைப்படும் போதும், அல்லது தேவையற்ற சக்தி அதிகரிக்கும் போதும், அழிவுகளும், இயற்கை சீற்றங்களும் உலகில் தோன்றுகின்றன. நோய்களும் தொந்தரவுகளும் உடலில் தோன்றுகின்றன.

பஞ்சபூத சக்தியின் உருவாக்கம்
மனித உடலிலும், உலகிலும் பஞ்சபூத சக்திகள் தன்னை தானே சரி செய்துகொண்டும், தனக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்துகொண்டும்; தன்னைச் சார்ந்த மற்றொரு பஞ்சபூத சக்தியை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. இந்த செயல் பெரும்பாலும், தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த பஞ்சபூத சக்தியின் உற்பத்தி தடைப்படும் போதுதான் மனிதனின் உடலில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகின்றன.

வாசகர்கள் சுலபமாக புரிந்துக் கொள்வதற்காக , சக்தியை உருவாக்கும் மூலகத்தை தாய் மூலகம் என்றும் உருவாக்கப்படும் மூலகத்தை சேய் மூலகம் சென்றும் அழைப்போம்.

பஞ்சபூதங்களின் உருவாக்கம்
பஞ்சபூதங்கள் என்பது தனி தனியான ஐந்து சக்திகள் அல்ல. ஒன்றை ஒன்று சார்ந்த ஐந்து சக்திகளின் கூட்டு. பஞ்சபூதங்கள் ஒன்றுடன் ஒன்று உறுதுணையாகவும், ஒத்துழைப்பாகவும், செயல்படுகின்றன. ஒரு பஞ்சபூத மூலகம்தாம் அடுத்த மூலகத்தை உருவாக்குகிறது.

தாய் மூலகம்
1. நெருப்பு - நிலத்தை உருவாக்குகிறது
2. நிலம் - காற்றை உருவாக்குகிறது
3. காற்று - நீரை உருவாக்குகிறது
4. நீர் - மரத்தை உருவாக்குகிறது
5. மரம் - எரிந்து மீண்டும் நெருப்பை உருவாக்குகிறது

இப்படியாக ஒரு மூலகம் தனக்குத் தேவையான அல்லது தன்னைச் சார்ந்த அடுத்த மூலகத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு பஞ்சபூத மூலகமும், அடுத்த பஞ்சபூத மூலகத்தை உருவாக்குவதால், அது தான் உருவாக்கிய மூலகத்துக்கு தாய் மூலகமாக இருக்கிறது.

பஞ்சபூத சக்தியின் உருவாக்கம்


பஞ்சபூத சக்திகளின் உறவுகள்


பஞ்சபூதங்கள் (Five natural elements)
1. நெருப்பு - Fire
2. நிலம் - Earth
3. காற்று - Air
4. நீர் -Water
5. மரம் - Wood

தாய் சேய் உறவு
1. நெருப்பு நிலத்தை உருவாக்குவதால், நெருப்பு நிலத்துக்கு தாய்.
(நிலம் நெருப்பால் உருவாக்கப் பட்டதால் நிலம் நெருப்புக்கு சேய்)

2. நிலம் காற்றை உருவாக்குவதால், நிலம் காற்றுக்கு தாய்.
(காற்று நிலத்தால் உருவாக்கப் பட்டதால் காற்று நிலத்துக்கு சேய்)

3. காற்று நீரை உருவாக்குவதால், காற்று நீருக்கு தாய்.
(நீர் காற்றால் உருவாக்கப்பட்டதால் நீர் காற்றுக்கு சேய்)

4. நீர் மரத்தை உருவாக்குவதால், நீர் மரத்துக்கு தாய்.
(மரம் நீரால் உருவாக்கப்பட்டதால், மரம் நீருக்கு சேய்)

5. மரம் நெருப்பை உருவாக்குவதால், மரம் நெருப்புக்குத் தாய்.
(நெருப்பு மரத்தால் உருவாக்கப்பட்டதால் நெருப்பு மரத்துக்கு சேய்)

இப்படியாக ஒவ்வொரு மூலகமும் ஒரு மூலகம் உருவாகக் காரணமாக இருப்பதால். பஞ்சபூதத்தில் அனைத்து மூலகங்களும், ஒரு மூலகத்துக்கு தாயாகவும், அடுத்த மூலகத்துக்கு சேயாகவும் செயல்படுகிறது.